![fadsgdv](http://image.nakkheeran.in/cdn/farfuture/qIV7HBuGIlARMmNyRznazVH0KSkzbMBnKpkRwvY44SM/1622796230/sites/default/files/inline-images/Sushant-Singh-Rajput-the-reel-MS-Dhoni-was-cricket-through.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குக் காரணம் பாலிவுட்டில் நடக்கின்ற குடும்ப ஆதிக்கமே என்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து சுஷாந்தின் வாழ்க்கையை மையமாக வைத்து “நய்யே: தி ஜஸ்டிஸ்” என்ற பெயரில் பாலிவுட் படம் ஒன்று உருவாகியுள்ளது.
![bhshdsfhds](http://image.nakkheeran.in/cdn/farfuture/ahOnvfXZSI5Gchnh-9O2BQMLjG1UQDSTwK8QT4a-j4M/1622796272/sites/default/files/inline-images/sushant-singh-rajput-cremated-by-father-in-mumbais-pawan-hans-crematorium-001_0.jpg)
இதில் சுஷாந்த் சிங் வேடத்தில் ஜூபர் கானும், காதலி ரியா சக்கரவர்த்தியாக ஸ்ரேயா சுக்லாவும் நடித்தனர். திலீப் குலாட்டி இப்படத்தி இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 11ஆம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங், படத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பு வரும்வரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இதனால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.