Skip to main content

“சுசாந்தின் மரணத்திற்குப் பிறகு அவர்களை ஏன் சந்திக்க வேண்டும்...” -கங்கணா டீம் கேள்வி!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

kangana ranaut

 

கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து அவருடைய தற்கொலைக்கு, பாலிவுட்டில் நடைபெறும் உள் அரசியல், மற்றும் வாரிசு அரசியல்தான் காரணம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். 

 

பல பிரபலங்களை அழைத்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுசாந்தின் காதலி என்று சொல்லப்படும் ரியா சக்ரோபாரதி உள்ளிட்ட ஆறு பேர் மீது சுசாந்தின் தந்தை காவல்துறையில் புகாரளித்திருப்பது, வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

வெளியிடப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், ரியா சக்ரோபாரதி, ரூபாய் 15 கோடியை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுன்ட்டுக்கு மாற்றியுள்ளதாக சுசாந்தின் தந்தை பகிரங்கக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும்,“2019ஆம் ஆண்டு வரை சுஷாந்திற்கு எந்த மன அழுத்தமும் இல்லை. அப்படி ஏற்பட்டிருந்தால், அவர் ஏன் அதைக் குடும்பத்திடம் இருந்து மறைக்க வேண்டும், இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் சொல்லிய மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைதான் சுஷாந்த் எடுத்துக் கொண்டுள்ளார். அதனால் சுஷாந்திற்கு மருத்துவம் பார்த்ததாகச் சொல்லப்படும் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், ரியா கடைசியாக சுஷாந்திடம் இருந்து செல்லும் போது, அவரின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், இன்னும் சில மெடிக்கல் ஃபைல்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் சுசாந்தின் காதலி இதில் பலிகடா ஆக்கப்படுவதாக கங்கணாவின் சமூக வலைதளக் குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதில், “நிச்சயமாக ரியா பணத்தைச் சுரண்டுபவர்தான். ஏனெனில், சுஷாந்த் மட்டுமே அவரது வருமானத்துக்கான ஆதாரமாக இருந்தார். சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு அவர் ஏன் அக்தர்களைச் சந்திக்க வேண்டும்? அல்லது மாஃபியா கும்பல் அவரைப் பயன்படுத்திக் கொள்கிறதா? அந்தத் தற்கொலை கும்பல் ரியாவைப் பலிகடாவாக்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்