Skip to main content

திரையரங்கில் 'சூரரைப்போற்று'... கொண்டாடும் ரசிகர்கள்!

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

surya starring soorarai pottru film rerelease on madurai theatre

 

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில்  ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில்  வெளியானது  ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.  இருப்பினும் ரசிகர்கள் சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மதுரையில் உள்ள மிட்லண்ட் திரையரங்கில் 'சூரரைப்போற்று' திரைப்படம் (4.2.2022) திரையிடப்பட்டுள்ளதால் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் காலையில் இருந்தே சூர்யா கட்டவுட்டிற்கு மலை அணிவித்து பல அபிஷேகம் செய்து 'சூரரைப்போற்று' சூர்யாவை திரையில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். 

 

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்