சூர்யாவின் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2D என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க சூர்யா அறிவித்திருந்தார். முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான 'பெப்ஸி' க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் மற்றும் நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா ஆகியோர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளைக்கு இருபது லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில்...
"நடிகர் திரு.சூர்யா சிவகுமார் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளைக்கு 20,00,000 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். முதலில், அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தொழிலை இழந்து நிற்கும் இன்றைய சூழலில், நாடக மற்றும் மூத்த திரைப்பட நடிகர் நடிகைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். திரு. சூர்யா அவர்கள் வழங்கியுள்ள இந்த இருபது லட்ச ரூபாய் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள இரண்டாயிரம் நபர்களுக்கு விரைவில் பிரித்து வழங்கப்படும்.
- தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை. 31.8.2020" என கூறியுள்ளனர்.