Skip to main content

'சூர்யா 40' குழுவினரோடு சூர்யா இணைவது எப்போது? - வெளியானது புதிய தகவல்!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

suriya

 

'சூரரைப் போற்று' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, 'சூர்யா 40' எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

 

சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள நடிகர் சூர்யா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சூர்யா இல்லாத காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது.

 

இந்த நிலையில், சூர்யா 40 படக்குழுவினரோடு சூர்யா இணைவது எப்போது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த வாரத்தில் படக்குழுவினரோடு சூர்யா இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்