உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ வருகிற மே 17 ஆம் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்படவுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படவுள்ளன. அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் (Midnight Screenings section) பிரிவிலும் ராகுல் ராய் நடித்த 'ஆக்ரா' படம் ஃபோர்ட்நைட் (Fortnight section) பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான 'இஷானோ' படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் (prestigious Cannes Classic section) பிரிவிலும் திரையிடப்படவுள்ளன.
இது தொடர்பான அறிவிப்பு முன்னதாக வந்த நிலையில் கென்னடி படம் குறித்து அனுராக் காஷ்யப் தற்போது பேசியுள்ளார். "இப்படத்தின் ஜானர் நான் எப்போதும் ஆராய விரும்ப கூடிய ஒன்று. தனது வாழ்நாளில் 8 மாதங்கள் நடித்து கொடுத்த கொடுத்த ராகுல் பட், மற்றும் படக்குழுவினருக்கு நன்றி" என கூறினார்.
இப்படம் பல ஆண்டுகளாக இறந்துவிட்டதாகக் கருதப்படும் கென்னடி என்ற கதாபாத்திரம் ஒரு தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட முன்னாள் காவலர், அதிகாரி பற்றி கூறுகிறது. இப்படத்தில் ராகுல் பட் மற்றும் சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.