Skip to main content

‘மூக்குத்தி அம்மன் 2’ - என்ட்ரி கொடுத்த இயக்குநர் 

Published on 16/09/2024 | Edited on 16/09/2024
sundar c is to direct mookkuthi amman 2

ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இந்தப் படத்திலும் நயன்தாராவே மீண்டும் அம்மனாக நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியான நிலையில் இயக்குநர் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதையடுத்து சுந்தர்.சி. இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த இயக்குநர் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே தகவல் வெளியானது போல சுந்தர்.சி.-யே இப்படத்தை இயக்கவுள்ளார். இதை வீடியோவாக வெளியிட்டு தெரிவித்த படக்குழு படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். சுந்தர்.சி. கடைசியாக அரண்மனை 4 படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வடிவேலுவை வைத்து கேங்கர்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்