Skip to main content

உங்கள் ஆன்மாவுக்கு திருப்தி அளிக்கும் விஷயம் என்ன? - சுபிக்ஷா கேள்வி!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

hrhdhd

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

 

மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மேலும் சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்துவரும் நிலையில், நடிகை சுபிக்ஷா கரோனா ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு உணவு வழங்கினார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் ஆத்மா திருப்தி அடைய ஒரு சிறந்த விஷயம், ‘மற்றவர்களுக்கு உணவளித்தல் அல்லது தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தல்’. உங்கள் ஆன்மாவுக்கு திருப்தி அளிக்கும் விஷயம் என்ன?" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிதி நிறுவன மோசடி வழக்கு; சுபிக்‌ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Financial Institution Fraud Case; 20 years in jail for Subiksha Subramanian

 

சென்னை அடையாறு பகுதியில் ‘விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டு பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், முதலீடுகளுக்கு அதிகமான வட்டி தருவதாக கூறியதை நம்பிய பல பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

 

அவர் அளித்த அந்த புகாரின் பேரில், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள் என 17 நிறுவனங்களின் இயக்குநர்களான சுபிக்‌ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் கடந்த 2020 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இந்த நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் போது இயக்குநர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர். தலைமறைவான அப்பாதுரை, இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (20-11-23) நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த வழக்கில் தொடர்பான சுபிக்‌ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்ற இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கு ரூ.191.98 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், இதில் 180 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. 

 

 

Next Story

ரிலீஸுக்கு முன்பே விருதுகளை வாங்கி குவிக்கும் 'சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை' படம்!

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

sakkarai thukkalai oru punnagai movie get 10 awards

 

நபீஹா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில், நுபாஸ் ரகுமான் 'சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை' என்ற படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் மகேஷ் பத்மநாபன் இயக்கும் இப்படத்தில், கதாநாயகனாக ருத்ரா நடிக்க, கதாநாயகியாக சுபிக்ஷா நடித்துள்ளார். ‘ராட்சசன்’ வினோத் சாகர், பீட்டர், கணபதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் இப்படம் வெளியீட்டுக்கு முன்பே 'செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' , 'சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' , இண்டியன் மீராக்கி அவார்டு 2021, ஆர்ஐஎஃப்எஃப் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 10 விருதுகளை வென்றுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான 5 விருதுகள் படத்தின் நாயகன் ருத்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.