சூர்யா நடித்து, தயாரித்து தீபாவளிக்கு வெளியான படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கிய இப்படம், அமேசான் ப்ரைம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யாவுக்கு, தமிழில் மட்டுமில்லாது, தெலுங்கிலும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. எனவே, சூர்யாவின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். சூரரைப் போற்று படமும், தெலுங்கில் வெளியாகிவுள்ளது.
கரோனா தோற்று பரவலால் மூடப்பட்ட திரையரங்குகள், தமிழகத்தில் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வரவில்லை.
இந்தநிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், டிசம்பர் 11 ஆம் தேதி முதல் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. எனவே ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவைப்பதற்காக, சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தை திரையரங்கில் வெளியிடும் முயற்சியில், ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநில திரையரங்கு உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர். சூரரைப் போற்று படத்தின் உரிமை அமேசான் ப்ரைமிற்கு விற்கப்பட்டுள்ளதால், அமேசான் ஒ.டி.டி தளத்திடமிருந்து பிரத்யேக அனுமதி வாங்க, அத்திரையரங்கு உரிமையாளர்கள் முயன்று வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.