Skip to main content

“ஆடியன்ஸின் தரம் உயர்ந்திருக்கு” - எஸ்.ஜே. சூர்யா மகிழ்ச்சி

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

sj aurya speech at jigarthanda thanks giving meet

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம்  'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். 

 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். அப்போது மேடையில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “இப்படி ஒரு தரமான படத்திற்கு தரமான வெற்றியை ஆடியன்ஸ் கொடுத்திருக்காங்க. அவர்களுடைய தரம் நிச்சயமா உயர்ந்திருக்கு. முன்னாடியெல்லாம் ஒரு காமெடி சீனுக்கு க்ளாப்ஸ் வரும் அல்லது ஒரு ஆக்‌ஷன் சீனுக்கு க்ளாப்ஸ் வரும். ஆனால் ஒரு எமோஷ்னல் சீனுக்கு ஆடியன்ஸ் க்ளாப்ஸ் தட்றாங்க. அந்தளவிற்கு மக்கள் ரெடியாகிட்டாங்க. அதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.     

 

லீவ் இல்லாத நாட்களிலே 80% ஷோ ஃபுல்லாகுது. இரண்டாவது வாரத்திலிருந்து காட்சிகள் அதிகமாயிருக்கு. இது ஒரு புரட்சிகரமான வெற்றி. இறைவி படத்தில் நடிகனா எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. அப்புறம் வில்லனா, குணச்சித்திர நடிகனா தொடர்ந்தது. இப்போ இங்க வந்து நிக்குது. இந்த படத்திற்கு பிறகு பெரிய டைரக்டர்கள், என்னை ஹீரோவா வச்சு படம் பண்ண ஆர்வமா இருக்காங்க. அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. ரஜினி சார் நடிகவேள் என சொன்னது, ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துச்சு. கலை மீது அவர் வைத்திருக்கும் அன்பு பெரிய பண்பு. அதனால்தான் புது பசங்களை சப்போர்ட் பண்ணி ஊக்கப்படுத்துகிறார்” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்