Skip to main content

கமல் கூட்டணியில் மாவீரனாகும் சிவகார்த்திகேயன்? 

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

sivakarthikeyan sk21 tittle maveeran

 

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் ’அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  

 

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'எஸ்கே 20' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரங்கூன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி 'எஸ்.கே 21' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல் தயாரிக்கவுள்ளார். 

 

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு படக்குழு 'மாவீரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான 'மகதீரா' படத்தின் தமிழ் தலைப்பு 'மாவீரன்' என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்