Skip to main content

"இன்றைய சூழலில் இந்த மாதிரியான படங்கள் அவசியம்" - சிவகார்த்திகேயன்

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

sivakarthikeyan review about aamir khans Laal Singh Chaddha movie

 

அமீர் கான் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லால் சிங் சத்தா'. இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

 

இந்நிலையில் 'லால் சிங் சத்தா' படத்தின் சிறப்பு காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பார்த்து, "இப்படம் உறவுகள், மனிதநேயம், அன்பு உள்ளிட்டவை பேசுகிறது. இன்றைய சூழலில் இந்த மாதிரியான படங்கள் அவசியம். எப்போதெல்லாம் நாம் சோகமாக உணர்கிறோமோ அப்போது ஊக்கமளிக்கும் வகையில் சில படங்கள் இருக்கும். அதில் 'லால் சிங் சத்தா' படமும் ஒன்றாக இருக்கும். அமீர் கான் சார் நீங்கள் கிரேட்" என பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்