காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்த நடிகை குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக அடிக்கடி தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதி அனுப்பினார். இந்நிலையில் எதிர்பார்த்த மாதிரியே பாஜகவில் குஷ்பு தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது பாஜக குறித்து குஷ்பு பதிவிட்டிருந்த ட்விட்டர் அனைத்தையும் பதிவிட்டு குஷ்புவை தாக்கி வந்தார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில், "விமர்சிக்கிறோம் எனும் பெயரில் குஷ்பு மீது தனிநபர் தாக்குதல் செய்வது அரசியல் நாகரீகமல்ல" என்று தெரிவித்துள்ளார்.
இதன்பின் சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்றவர்கள் குறித்து சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், "சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ணப் போறீங்க?” என்று தெரிவித்துள்ளார்.