மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனிடையே நடிகர் சிம்பு ஆட்டோ ஓட்டுநர் கெட்டப்பில் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இதனை பார்த்த ரசிகர்கள் இது புதிய படத்திற்கான கெட்டப்பா அல்லது வேறு ஏதாவது விளம்பர படமாக என குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, "உங்களுக்காக ஒரு புதிய அப்டேட். புது ஆரம்பம். தமிழால் இணைவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று இசையமைப்பாளர் அனிருத்தும் தனக்கு ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து 'தமிழால் இணைவோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் பதிவு குழப்பத்தில் இருந்த ரசிகர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிம்புவின் ட்வீட்டை ரீட்வீட் செய்த இயக்குநர் வெங்கட் பிரபு,"வந்தாங்க ட்வீட் போட்டாங்க, ட்ரெண்ட் ஆனாங்க, ரீப்பிட்டு. என்ன நடக்குது பிரதர்ஸ்?" எனக் கேட்டுள்ளார்.
. @SilambarasanTR_ @anirudhofficial Vandhanga tweet potaanga trend aananga Repeat-u, Enna Nadakkuthu Brothers? What is this #TamilConnects #தமிழால்_இணைவோம் ? 😄 https://t.co/1BzTQ9JwB7— venkat prabhu (@vp_offl) April 13, 2022