Skip to main content

”போனால் முதல்ல என் தலைதான் போகும்னு சொன்னார்” - இயக்குநர் ஷங்கர் பேச்சு

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Shankar

 

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.  

 

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “வாரியர் நல்ல டைட்டில். நாம் எல்லோருமே எந்நேரமும் எதற்காவது போராடிக்கொண்டே இருப்பதால் நாம் அனைவருமே வாரியர்கள்தான். படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. டிஎஸ்பி படத்திற்கு படம் வித்தியாசமாக இசையமைக்கிறார். ட்ரைலர் பார்க்கும்போது ராம் பொத்தினேனியிடம் ஒரு ஃபயர் தெரிந்தது. அவருடைய படங்கள் நான் பார்த்ததில்லை. இந்தப் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். கீர்த்தி ஷெட்டி இன்னும் நிறைய படங்கள் நடித்து கீர்த்தி சுரேஷ் போல தேசிய விருது வாங்க வேண்டும். ஆனந்தம் படத்தின் ஃபேமிலி பாண்டிங், ரன் படத்தின் ஸ்டைல், சண்டக்கோழி படத்தில் உள்ள ஹீரோ, வில்லனுக்கு இடையேயான மோதல் ஆகிய மூன்றும் இந்த ஒரே ட்ரைலரில் தெரிவதால் மூன்று படங்கள் பெற்ற வெற்றியை வாரியர் படம் பெறும் என்பது என்னுடைய எண்ணம். அது அப்படியே நடக்கும் என்று நம்புகிறேன். 

 

லிங்குசாமி நல்ல ரசனையுடையவர். கரோனா சமயத்தில் எனக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தது. பெரிய சிக்கலில் மாட்டியிருந்தேன். அது எல்லாவற்றையும் அவரிடம்தான் சொல்லுவேன். ’நீங்க கவலைப்படாதீங்க சார், உங்களுக்கு முன்னால நான் இருக்கேன், போனால் முதல்ல என் தலைதான் போகும்’ என்று சொன்னார். அந்த நட்பிற்கு நன்றி லிங்கு. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்