தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையான ஜெயலக்ஷ்மி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

கேரளாவை பிறப்பிடமாகக்கொண்ட ஜெயலக்ஷ்மி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தடைந்தார். பிரிவோம் சந்திப்போம் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர், ஒருசில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.
வெள்ளித்திரையில் அவ்வளவாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் பெரிதாக வாய்ப்பும் கிடைத்தது. சின்னத்திரையில் இவர் நடிப்பதன் மூலம் குடும்ப பெண்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவர் பாஜகவில் இணைந்திருப்பதாக பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், "திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி, இன்று தன்னை தமிழக பாஜகவில் இனைத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.