Skip to main content

"‘ஆயிரத்தில் ஒருவன்' விளம்பரத்திற்காக பொய் சொன்னேன்!" - செல்வராகவன் சர்ச்சை ட்வீட்!

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

bfshsfbfs

 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட இப்படம், வெளியானபோது வசூல் ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்தது. பின்னர் சமூக வலைதளங்களின் பயன்பாடு பரவலான பிறகு இப்படத்தின் பிரம்மாண்டத்தை உணர்ந்த ரசிகர்கள், இன்றளவும் இப்படத்தைக் கொண்டாடிவருகின்றனர். இந்த ஏகோபித்த ஆதரவைக் கண்ட இயக்குநர் செல்வராகவன், இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்; மேலும், புத்தாண்டு தினத்தன்று 'ஆயிரத்தில் ஒருவன் 2' குறித்த அப்டேட்டை வெளியிட்டார். இதற்கிடையே, 'ஆயிரத்தில் ஒருவன்' படம் வெளியான சமயத்தில் தயாரிப்பாளருக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் படத்தின் பட்ஜெட் சம்பந்தமாக கடும் மோதல் ஏற்பட்டது. 

 

இதையடுத்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், இதுவரை எந்தப் படமும் தயாரிக்காமல் இருந்துவரும் நிலையில், இயக்குநர் செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட்ஜெட் குறித்து தற்போது ட்வீட் செய்துள்ளார். அதில்... "‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி. ஆனால், இதை ஒரு மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்த, 32 கோடியில் உருவான படமாக இப்படத்தை அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம்! படம் உண்மையான பட்ஜெட் தொகையை வசூலித்தாலும் அது சராசரி படமாகவே கருதப்பட்டது! எவ்வளவு முரண்பாடுகள் வந்தாலும் பொய் சொல்லாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்!" என பதிவிட்டுள்ளார். செல்வராகவனின் இந்தப் பதிவு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்