நடிகர் ஆர்யாவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி முன்பெல்லாம் அனைவராலும் கேட்கப்பட்ட ஒன்றாக இருக்கும். அதேபோல நடிகர் விஷாலிடம் இந்த கேள்வி அதிகமாக கேட்கப்படும். இந்த நிலையில் இவ்விருவர்களும் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஷால், ஆந்திரா தொழிலதிபர் மகளும், தெலுங்கு பட நடிகையுமான அனிஷா ரெட்டியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்ற செய்தி வெளியான பின்பே நடிகர் ஆர்யாவும் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதுவும் நடிகர் சாயிஷாவை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று முதல் கிசுகிசுவாக கசிந்தது. பின்னர், இருவர் வீட்டிலும் பேசியாகிவிட்டது திருமணம் மார்ச் மாதத்தில் உறுதியாக நடந்துவிடும் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில், காதலர் தினமான இன்று நடிகர் சாயிஷா முதன் முதலாக நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வது குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். பெற்றோர்களின் சம்மதத்துடன் எங்களின் திருமணம் மார்ச் மாதம் நடைபெறுகிறது என்றும். மேலும் அதில் காதலார் தின வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.