விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்த திரப்படம் முதல் ஒரு வாரத்தில் நல்ல வசூல் வேட்டையில் இறங்கினாலும். அடுத்தடுத்து வந்த வாரங்களில் மிக குறைவான வசூலையே எடுத்துள்ளது. விஜயின் கோட்டை என்று சொல்லப்படும் கேரளாவில் மிக மோசமான வசூலையே சர்கார் பார்த்துள்ளது என்கின்றனர்.
ஆனால், விஜய்க்கு மவுசு இல்லாத ஆந்திராவில் சர்கார் மிகப்பெரிய கலெக்ஷன் ஒன்றை அள்ளியுள்ளதாம். விஜய்க்கு தெலுங்கு மக்களிடம் அவ்வளாக மார்க்கெட் இல்லாமல் இருந்தது. அதனால் 7 கோடிக்குதான் இந்த படத்தின் தெலுங்கு உரிமம் போனது. கடையில் தெலுங்கில் சர்கார் சுமார் ரூ. 18 கோடி வசூலை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கான ஷேர் மட்டும் ரூ. 8.5 கோடி கிடைத்துள்ளது. கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் மார்க்கெட்டை உருவாக்கி வருகிறார் விஜய். ஆந்திராவில் விஜய்க்கு மவுசு அதிகம் என்பதைவிட கீர்த்திக்கு மவுசு அதிகம் என்றும் பலர் சொல்லி வருகின்றனர்.