
சமந்தா, மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்பு ஓராண்டுக்கு மேலான பிறகு மீண்டும் நடிப்பிற்கு வந்ததாகத் தெரிவித்திருந்தார். இடையில் ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இதையடுத்து இப்போது ‘ரக்த் பிரம்மாந்த்’(Rakht Brahman) என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடித்து தயாரித்தும் வருகிறார்.
இந்த நிலையில் அவர் தயாரிப்பு நிறுவனம் ‘சுபம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளதாகவும் இந்தப் படம்தான் முதலில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இப்படத்தை வசந்த் மரிகாந்தி எழுதியிருக்க பிரவீன் கேண்ட்ரெகுலா இயக்கியுள்ளார். இதில் ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷ்ரேயா கோந்தம், சரண் பெரி, ஷாலினி கோண்டேபுடி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ரவாணி உள்ளிட்ட ஆறு பேர் நடித்துள்ளனர்.

இந்த அறிவிப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படப் பூஜை தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளதால் சமந்தா மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் அடுத்தடுத்து டீசர், டிரெய்லர் போன்ற அப்டேட்டுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.