Skip to main content

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

sai pallavi joining sivakarthikeyan next movie

 

'டாக்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்' படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து ராஜ்கமல் ஃபில்ம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றை நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி தமிழில் 'மாரி 2' என்.ஜி.கே ஆகிய படங்களில்  கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்