
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் முடிவெட்டும் தொழிலில் ஆர்வம் உள்ள ஆர்.ஜே பாலாஜி, அத்துறையில் சாதிக்க ஆசைப்படுகிறார். அவரது ஆசை நிறைவேறியதா இல்லையா, அதற்காக அவர் என்ன இன்னல்களை சந்திக்கிறார் என்பதை காதல், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்து சொல்லியிருப்பது போல் உருவாகியுள்ளது.
ட்ரைலரில் ஆர்.ஜே பாலாஜி பேசும் வசனம், ‘என்ஜினியரிங் என்ன நம்ம குலத்தொழிலா...’,‘இவுங்களுக்கெல்லாம் நம்ம அவுங்க கீழ இருக்கிற வரைக்கும் ஒகே, கொஞ்சம் மேல போனாக்கூட அழிச்சிடுவாங்க...’, ‘ஒரே நைட்ல மொத்த பிரச்சனையும் தீர்க்கனும்-னா நான் என்ன பண்ணுவேன்...’, உள்ளிட்ட வசனங்கள் கவனம் பெறுகிறது. மேலும் ஜீவா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர்.