Skip to main content

'மாலையில் சிறிது நேரம் மது கடைகள் திறக்கலாமே' - பிரபல நடிகர் யோசனை  

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,23,328 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,005 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,991 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ள நிலையில் இதன் காரணமாக 21 நாட்கள் 144 தடை உத்தரவு தற்போது அமலில் இருந்து வருகிறது. 

 

gge

 

 

இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ள நிலையில் ஹிந்தி நடிகரான ரிஷி கபூர் மாலையில் சிறிது நேரம் மதுக்கடைகளைத் திறப்பது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...''அரசு மாலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடைகளை சிறிது நேரம் திறந்து வைக்கலாம். இதற்காக என்னை தவறாக நினைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் மனிதனுக்கு மனச்சோர்வு இருக்கும். போலீசார், மருத்துவர்கள், பொதுமக்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அதேபோல் மாநில அரசு கலாலுக்கும், வருவாய்த் தீவீரமாகத் தேவைப்படுகிறது. மனசோர்வில் விரக்தி கண்டிப்பாகச் சேர்ந்துவிடக்கூடாது. இது என் கருத்து'' எனப் பதிவிட்டு அரசாங்கத்திற்கு யோசனை தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்