Skip to main content

“நிர்வாகம் பொறுப்பல்ல...”- விஷால் தயாரிப்பு நிறுவனம்!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

vishal

 

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த பெண் கணக்காளர் ரம்யா என்பவர் நிறுவனத்தின் பணத்தினை மோசடி செய்துவிட்டதாக மேலாளர் கிருஷ்ணன் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இதுகுறித்து விஷாலின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த ரம்யா என்பவர், நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பது கண்டறியப்பட்டு, 30.6.2020 அன்று புகார் அளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7.7.2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

 

எனவே, ரம்யா இனி எங்கள் நிறுவனமான 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில்' பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனத்தின் கணக்குத் தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

 

மேலும் மீறி தொடர்பு வைத்துக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்