Published on 31/03/2025 | Edited on 31/03/2025

ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசுகையில், “ஒவ்வொரு படத்திற்கு ஒரு மையக்கரு உள்ளது. ‘சாரி’ படத்தின் கரு சோஷியல் மீடியாவின் தாக்கம் உறவுகளில் எப்படி இருக்கிறது என்பதுதான். சில நேரங்களில் கெட்ட விஷயங்கள் நடந்து அது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைத்தான் ‘சாரி’ திரைப்படம் பேசுகிறது” என்றார்.