Skip to main content

ராஜமௌலி - மகேஷ் பாபு பட அப்டேட்

Published on 19/03/2025 | Edited on 19/03/2025
rajamouli mahesh babu movie update

இயக்குநர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து இன்னும் பெயரிடாத படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

இப்படத்தின் கதை காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிக்கின்றன. இருப்பினும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிசாவில் துவங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் நடிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் லீக்கானது. இதன் மூலம் பிரித்விராஜ் நடிப்பது தெரியவந்துள்ளது. லீக்கான காட்சிகள் தொடர்பாக படக்குழு படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்தியது. 

இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசாவில் நடந்து வந்த நிலையில் இது குறித்து பேசிய ஒடிசா துணை முதல்வர் பிரவதி பரிதா, படப்பிடிப்பு கோராபுட் பகுதியில் நடப்பதாகவும், இது ஒடிசா சுற்றுலா துறைக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் கோராபுட் பகுதியில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் ராஜமௌலிக்கு அம்மாநில எம்.எல்.ஏ. ராமச்சந்திர கதம் பரிசு ஒன்றை வழங்கினார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதோடு ரசிகர்களுடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்