கரோனாவால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் டிரஸ்டை சேர்ந்த 18 குழந்தைகள் மற்றும் 3 ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் உடனடி சிகிச்சைக்காக சென்னை லயோலா கல்லூரியில் உள்ள முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட 21 நோயாளிகளின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் காய்ச்சல் அளவு குறைந்து வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அக்குழந்தைகளின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
"என் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்குச் சிகிச்சை முடிந்து பத்திரமாக டிரஸ்டுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி. என் சமூக சேவைதான் எனது குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளது. குழந்தைகளுக்காக வேண்டுதல் செய்த அனைவருக்கும் நன்றி. சேவையே கடவுள்'' என விளக்கம் அளித்துள்ளார்.