Skip to main content

'நீங்க எல்லாம் சினிமாவுக்கே வராதீங்க மா' - சின்மயி, ஸ்ரீரெட்டியை கிழித்த ராதாரவி ! 

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
radharavi

 

சமூகத்தில் தடுக்க முடியாத குற்றங்களில் ஒன்றான குழந்தை கடத்தலை கருவாக கொண்டு உருவாகியுள்ள படம் 'அவதார வேட்டை'.  வி.ஆர்.விநாயக், மீரா நாயர் இணைந்து நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா, மகாநதி சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  அறிமுக இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி மீடூ வில் தன் மேல் எழுந்த புகார் குறித்து பேசியபோது...

 


"உதவி இயக்குனர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு இயக்குனர் ஆகிறார்கள். தயவுசெய்து அவர்கள் மேல் பழி பாவம் போட்டு கொன்றுவிடாதீர்கள். சினிமாவில் ஒப்பனை பயிற்சி வைக்க வேண்டுமென்றால் ஒரு அறையில் தான் வைக்க முடியும். அதற்குள் ஒரு இயக்குனர் வந்து விட்டால், உடனே அவர் கன்னத்தை கிள்ளி விட்டார், இடுப்பை கிள்ளி விட்டார் என்ன சொல்லி மீடூ வில் பதிவு செய்து விடுகிறார்கள். இப்படி செய்து நீங்களே உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். ஊரில் எவ்வளவோ சாமியார்கள் எல்லாம் பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மற்றவர்கள் மேல் மட்டும் குற்றம் சொல்வது என்ன நியாயம். முதலில் அந்த சாமியார் உன்னை என்ன செய்தார் என்று சொல்ல வேண்டுமல்லவா. என் மீது புகார் வைத்ததற்கு நான் நீதிமன்றத்தை சந்திக்கவும் தயாராக உள்ளேன்.

 

 

 

நடிகர் விஷால் அருமையாக சொன்னார். பிரச்சினை இருக்கும் போதே புகார் கொடுத்தால் நாங்கள் உடனே  நடவடிக்கை எடுப்போம் என்று. அதை விட்டுவிட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இப்போது வந்து சொன்னால் என்ன நியாயம். அதை எப்படி கண்டுபிடிப்பது. இப்படித்தான் ஆந்திராவில் ஒருவர் அங்கு பல பேர் மீது பாலியல் புகார்களை கூறி கூறி சலித்துப்போய் பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து பல பேர் மீது பாலியல் புகார் கூறினார். அது என்ன ஆனது இப்போ. பலரும் அதை இப்போது மறந்துவிட்டனர்.எந்த செய்தியாக இருந்தாலும் மூன்று நாட்கள் தான் அதற்குப் பிறகு அவை தாக்குப்பிடிப்பது கஷ்டம். அக்காலத்தில் என் தந்தை எம்ஜிஆர் அவர்களை சுட்டு விட்டார் என்ற செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. பின்னர் ஐந்து நாட்கள் கழித்து அது ஒரு பெரிய விஷயமாகவே யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்படியாகப் பட்ட செய்திக்கே இந்த நிலைமை என்றால் உங்கள் நிலைமை என்ன என்று கொஞ்சம் யோசித்துக் பாருங்கள். நீங்க எல்லாம் சினிமாவுக்கே வராதீங்க மா. கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். இது சினிமாவுக்கு மிகவும் அசிங்கமாக உள்ளது. தயவுசெய்து சினிமாவை அசிங்கப்படுத்தாதீர்கள். தயவுசெய்து முற்போக்காக இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளும் பெண்களிடம் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்" என்று ஆவேசமாகவும், உருக்கமாகவும் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்