
நவின்குமார் இயக்கத்தில் சுவாமிநாதன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடைசி தோட்டா’. இப்படத்தில் ராதா ரவி, ஸ்ரீகுமார், வனிதா விஜயகுமார், வையாபுரி, ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராதா ரவி பேசுகையில், “இந்த படத்தில் நடித்த ஸ்ரீ, இயக்குநர் நவின்குமார் என எல்லாரும் என்னை அப்பா, அப்பான்னு சொல்றாங்க. அப்படி சொல்லி சொல்லி என்னை அரசியல்ல மாட்டி விட்ருவாங்க போல இருக்கு. ஏன்னா நிறைய பேர் என்னை அண்ணன்னு கூப்புடு, தம்பின்னு கூப்புடு என கெஞ்சுறாங்க. ஆனா நான் கெஞ்சாமலே என்னை அப்பான்னு கூப்பிடுறாங்க.
வெளியில தெரிஞ்சா சிலர் நான் எதிர்பாளர்னு சொல்லிட போறாங்க. அதுக்காக பயந்தேன். சுமையை தூக்குபவன்தான் தந்தை. அதனால் அவங்க(படக்குழுவினர்) சொல்லும் போது எனக்கு சந்தோசம்தான்” என்றார்.