Skip to main content

"இது பல ஏழைக் குடும்பங்களை பட்டினியில் தள்ளிவிட்டது" - ராஷி கண்ணா வேதனை!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

gdgdvgds

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகை ராஷி கண்ணா கரோனாவால் உணவின்றித் தவிக்கும் மக்கள் குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதில்...

 

“கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து சாமானிய மக்கள் படும் பாட்டை சகிக்க முடியவில்லை. நிறைய குடும்பங்கள் கொடுமையான சூழலில் இருக்கின்றன. தொண்டு நிறுவனம் மூலம் என்னால் முயன்ற உதவிகளை வழங்கிவருகிறேன். இன்று லட்சக்கணக்கான மக்கள் உயிர் வாழத் தேவைப்படுவது ஆக்சிஜனும், உணவும்தான். இந்தப் பெருந்தொற்றால் பசியின் குரல் பலரின் காதுகளில் விழுவதில்லை. வாழ்வாதாரப் பற்றாக்குறையாலும், வருமானம் குறைந்துபோனதாலும் அடிப்படை தேவையான உணவுக்கே வழியில்லாமல் போய், இந்தப் பெருந்தொற்றின் இரண்டாம் அலை பல ஏழைக் குடும்பங்களைப் பட்டினியில் தள்ளிவிட்டது. கரோனா வைரசுக்கு முன்னால் பசியே அவர்களைக் கொன்றுவிடும்போல் உள்ளது. பல உதவி அமைப்புகளுக்குப் பணம் பற்றாக்குறையாக உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் இந்தப் பெருந்தொற்று நேரத்தில் பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு சாப்பாடு கொடுக்கிறேன். இப்போது உங்கள் உள்ளங்களைக் கொஞ்சம் திறந்து உதவ வேண்டிய நேரம் இது. உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவு கொடுங்கள்” என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்