![pushpa raj inspired ganpati idols](http://image.nakkheeran.in/cdn/farfuture/ddburAhXP_3Y-XFRDMlRIUYTfOwTvfyufy78zUrlYCQ/1661863641/sites/default/files/inline-images/1801.jpg)
விநாயகர் சதுர்த்தி நாளை (31.8.20220 நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களிலும், தெருக்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வணங்கும் நடைமுறை இருந்து வருகிறது. மேலும் ஒரு வாரம் கழித்து அந்த விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்திலோ, ஆற்றிலோ அல்லது கடலிலோ கரைக்கப்படும்.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்தாண்டில் எது பிரபலமாக இருக்கிறதோ அதன் சாயலில் விநாயகர் செய்து விற்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு புது வரவாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா பட சாயலில் விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள ராம் சரணின் கெட்டப் என பல்வேறு சாயலில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்து வருகிறது.