Skip to main content

'டீசரில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரைலர் தான்' - K13 படம் சொல்லும் வழிமுறை 

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

எஸ்.பி. சினிமாஸ் சார்பில் எஸ்பி சங்கர் மற்றும் சாந்தபிரியா தயாரிக்க, அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் 'K13'. பரத் நீலகண்டன் இயக்கி, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 

 

k13

 

எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் இது குறித்து பேசும்போது...."டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசிகர்களை தயார்படுத்துவதற்கான ஒரு வழிமுறை தான். எங்கள் புத்திசாலித்தனமான ரசிகர்கள் டிரெய்லரின் உண்மையான இலக்கணத்தை புரிந்து கொண்டதும், அதில் முக்கிய கதாபாத்திரங்களை புரிந்து கொண்டதும், அதை பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடல்களை விரைவில் வெளியிடவும், இந்த கோடை விடுமுறையில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறோம்.

 

 

தயாரிப்பாளர்கள் அருள்நிதியை பற்றி தொடர்ந்து புகழ்ந்து வருவதை பார்க்க செயற்கையாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை, இது ஒன்றும் புதிதல்ல. இன்று, சமூக ஊடகங்கள் மற்றும் வலை தளங்களில் பார்வையாளர்களிடமிருந்து வரும் பல கருத்துக்களில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது தெளிவாகிறது. அவர் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட ஒரு நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். அவர் நடித்தால் அந்த திரைப்படத்திற்கு அதுவே பெரிய அளவில் வலு சேர்க்கிறது. இதனை ஒரு தயாரிப்பாளராக வெறுமனே சொல்லவில்லை, மக்கள் ஏற்கெனவே அவரை அங்கீகரித்து, பாராட்டியுள்ளனர்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்