Skip to main content

"என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம்" - எமோஷ்னலாகும் பிரியா பவானி சங்கர்!

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

 priya bhavani shankar Spoke about pathu thala

 

சரியான கதாபாத்திரங்களின் தேர்வு மற்றும் சிறந்த  நடிப்பை கொடுக்க நிபந்தனையற்ற முயற்சிகள் என இவை அனைத்தும் நடிகை ப்ரியா பவானி சங்கரை தென்னிந்தியத் திரையுலகில் அதிக டிமாண்ட் கொண்ட நடிகையாக மாற்றியுள்ளது. நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘பத்து தல’ படத்திற்காக சிறந்த தொழில்நுட்பக் குழுவுடன் வேலை பார்த்த அனுபவம் குறித்து உற்சாகமாக ப்ரியா பவானி சங்கர் பேசி இருக்கிறார்.

 

“ஒரு நடிகைக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பதை விடவும் சவாலான கதாபாத்திரங்கள் சில கிடைப்பது சிறந்த ஒன்றுதான். அது கனவு நனவாகும் ஒரு தருணம். இயக்குநர் கிருஷ்ணா தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலுவான ஒன்றாக இருக்கும்படியே அமைப்பார். அந்த வகையில், அவருடைய ‘பத்து தல’ படத்தில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

 

இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோர் மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளனர். கௌதம் கார்த்திக்குடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞர். தன்னுடைய நடிப்பில் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். சிலம்பரசன் சாரின் தோற்றமும் நடிப்பும் எப்போதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியது. இந்தப் படத்தில் ஒவ்வொரு ஷாட் மீதும் அவரது அதீத அர்ப்பணிப்பு படம் பார்க்கும்போது தெரிய வரும். ஒவ்வொரு நடிகரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.

 

ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் கச்சிதமாக இருப்பதை உழைப்பை கொடுத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசையைக் கேட்டு வளர்ந்த நான், அவருடைய இசையமைப்பிலேயே திரையில் வருகிறேன் என்பது எனக்கு மிகவும் எமோஷனலான மற்றும் மகிழ்ச்சியான தருணம். குடும்பப் பார்வையாளர்களின் ரசனையை நிச்சயம் திருப்திப்படுத்தும் வகையில் பல எமோஷன்கள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என கமர்ஷியலான விஷயங்களை 'பத்து தல' கொண்டுள்ளது".

 

 

சார்ந்த செய்திகள்