Skip to main content

பிரபல நடிகரின் பட டிரெய்லரை முதல் ஆளாக பார்த்த ரஜினி

Published on 18/03/2025 | Edited on 18/03/2025
prithviraj meet rajini regards his l2 empuran movie release

மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் `எல்2; எம்புரான்' என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். 

இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அவர்களின் அவைவரின் கதாபாத்திர போஸ்டர்களும் தினம் ஒரு நாளில் கடந்த சில வாரங்களாக வெளியாகி வந்தது. கடந்த ஜனவரி மாதம் படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் அதனை கூட்டும் வகையில் முதல் பாகத்தை படக்குழு வருகிற 20ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறது. இந்த நிலையில் ப்ரித்விராஜ் இப்படம் தொடர்பாக ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எல்2; எம்புரான் பட டிரெய்லரை முதல் முதலில் பார்த்த நபர் ரஜினி. பார்த்துவிட்டு அவர் கூறிய வார்த்தைகள் நான் என்றென்றும் நினைவில் வைத்திருக்கக்கூடியவை. என்றென்றும் அவர் ரசிகர்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்