Skip to main content

தயாரிப்பாளரான இளவரசர்... பிரபல நிறுவனத்துடன் புது ஒப்பந்தம்! 

Published on 04/09/2020 | Edited on 04/09/2020
prince harry

 

 

பிரிட்டைன் அரச குடும்பத்திலிருந்து விலகிக்கொண்ட முன்னாள் இளவரசர் ஹாரி தற்போது ஹாலிவுட்டில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

 

அண்மையில் ஹாரி, மேகன் மார்கெல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதன்பின் இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகிக்கொள்வதாக ஹாரி தெரிவித்து, விலகியும் கொண்டார்.

 

இதனை தொடர்ந்துதான் படங்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த நிறுவனம் நெட்பிளிக்ஸுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. அது என்ன ஒப்பந்தம் என்றால், ஆவணப்படங்கள், ஆவணத் தொடர்கள், திரைப்படங்கள், ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

 

"எங்கள் கவனம் ஒரு சிறந்த படைப்பை உருவாக்குவதில்தான் இருக்கும், அதுதான் நம்பிக்கையைத் தருகிறது. நாங்களும் ஒரு புதிய பெற்றோர்களாக இருப்பதால் சில உத்வேகமூட்டும் குடும்ப நிகழ்ச்சிகளை உருவாக்குவது எங்கள் கடமையாக எடுத்துக் கொண்டுள்ளோம்" என்று ஹாரி தம்பதியினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்