சமீபத்தில் காவிரி பிரச்னை குறித்து பேச கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமியை சந்தித்து பேசினார் கமல்ஹாசன். அந்த சமயத்தில் கமல் 'காலாவை விட காவிரி தான் முக்கியம்' என்றார். இதற்கு பல்வேறு தரப்பிலுருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இதற்கு கண்டனம் தெரிவித்து பேசியபோது... "கர்நாடக முதல்வரிடம் காலா படம் குறித்து கமல்ஹாசன் பேசாதது தவறு. 'விஸ்வரூபம்' படத்துக்கு பிரச்சினை ஏற்பட்ட போது அதை கமல்ஹாசன் பெரிதுபடுத்தினார். உலகமே அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பது போல அவரது பேச்சுக்கள் இருந்தன. ஆனால் காலா படத்துக்கு இப்போது அவர் குரல் கொடுக்காமல் இருக்கிறார். நான் காலா படத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். எல்லா படங்களுக்காகவும் பேசுவது எனது கடமை. கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். சமூக விரோதிகளின் செயலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. படத்தை வெளியிடக்கூடாது என்று தடுப்பது தவறு. பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருப்பது தான் சரி" என்றார்.
Published on 06/06/2018 | Edited on 07/06/2018