Skip to main content

கரோனாவை கண்டுகொள்ளாத பிரபாஸ் படக்குழு!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

சுர்ஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் சாஹோ. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை படம் நிறைவு செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
 

prabhas

 

 

இதனைத் தொடர்ந்து பிரபாஸ் சாஹோ படத்தைத் தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பிலேயே பிரபாஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ராதா கிருஷ்ணா இயக்கி வருகிறார். 

சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால், உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சத்தால், அனைத்துப் பணிகளும் முடங்கிப் போயுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன.

ஆனால் கரோனா பரவல் குறித்து பெரிதாக கண்டுகொள்ளாமல் பிரபாஸ் 20 படக்குழு மட்டும் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்து இயக்குனர் ராதா கிருஷ்ணா தனது ட்விட்டர் பதிவில் “10 டிகிரி குளிர், தொடர் மழை, கரோனா தொற்று பீதி. ஆனால் படக்குழுவின் உற்சாகத்தை எவற்றாலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுடன் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்