Skip to main content

"விசேஷங்களில் பிராமின் அல்லாத மற்ற ஜாதியினரை மந்திரங்கள் ஓத செய்தால்?" - பேரரசு கருத்து!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

vszvzdsvbd

 

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் அர்ச்சகர் பயிற்சி முடித்த 54 பேருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் பணி நியமன ஆணை வழங்கினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் பயிற்சி முடித்துள்ள 24 பேர் உட்பட 58 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பேரரசு சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...

 

"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது வரவேற்கத்தக்கது தான். அதேசமயம், இதை ஆதரிப்பவர்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் திருமணம், கிரகப்பிரவேசம், கணபதி ஹோமம், புண்ணியதானம், பூஜை பரிகாரம் போன்ற விசேஷங்களில் பிராமின் அல்லாத மற்ற ஜாதியினரை மந்திரங்கள் ஓத செய்து நடத்த செய்தால் மற்றவர்களுக்கும் இது முன்னுதாரணமாக இருக்கும். செய்வார்களா?" எனக் கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்