
ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் மற்றும் மனிஷா ஜஷ்னானி முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட் ஃப்ளவர். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் பேசுகையில், “உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு உண்மையான பிரமாண்டமான உணர்ச்சிகரமான காட்சி விருந்தாக இருக்கும்” என்றார். இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன், “ரெட் ஃப்ளவர் படம், காட்சிக்கு காட்சி. உணர்ச்சி - உந்துதல் ஒளிப்பதிவு மற்றும் ஹைப்பர்-ரியலிஸ்டிக் கிராபிக்ஸ் பார்வையாளர்கள் மனதை கவரும் மெய்நிகர் படம்” என்றார்.
ரூ. 30 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட் ஃப்ளவரின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், ஹாலிவுட் வி.எஃப்.எக்ஸ். நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் வி.எஃப்.எக்ஸ். கண்காணிக்கப்படுகிறது.