உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா கரோனா வைரஸால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.
இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே3 ஆம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கில் பல நிபந்தனைகளை வைத்து தனி கடைகளையும், மதுபானக் கடைகளைத் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பைப் பலரும் விமர்சித்து எதிர்த்து வருகின்றனர். நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபனும் இந்த அனுமதியைத் தன்னுடைய ஸ்டைலில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு விமர்சித்துள்ளார்.
அதில், “நாளை நமதே என நினைத்திருந்தேன் TASMAC திறக்கும்வரை. இனி doubt தான். Social DR(Istanc)KING! பாருங்க.. எழுத்துக்களே கொளருது! Bottle மூடியைத் திறந்தாலே போதையேறிகளுக்கு.. கடையைத் திறந்தா? Immunity & community நாசமாப் போகும். திரு. R.சுந்தர்ராஜன் படத்தில் ஒரு வசனம் “அவ 1 நாள் பட்டினியா இருந்தா, 2 நாள் பட்டினியா இருந்தா, 3 நாள் பட்டினியா இருந்தா ஆனா 4- ஆவது நாள் அவளால பத்தினியா இருக்க முடியலை” ன்னு. அப்படிப் பசி வந்தா எதை வேணும்னாலும் விக்கலாமா? இன்னும் சில நாள் கண்டிப்பாக இருந்திருக்கலாம் milord. இதை நான் த(வ)ன்மையாகக் கண்டிக்கிறேன். இனி ஊரடங்கா சட்டம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.