Skip to main content

வைரலாகும் நிவேதா டான்ஸ்!!!(வீடியோ)

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

 



பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்துவர், நிவேதா தாமஸ். இவர் ஜில்லா படத்தில் நடிகர் ’விஜய்’க்கு தங்கையாக நடித்துள்ளார். மேலும் நாயகியாக மலையாளம், தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். 
 

இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் நிவேதா நண்பர்களுடன் நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளன. பிரபுதேவா நடிப்பில் வெளியான குலேபகாவலி என்னும் படத்திலுள்ள குலேபா பாட்டுக்கு நிவேதா தாமஸ் நடனம் ஆடி இருக்கிறார். இவருடன் இரண்டு இளைஞர்களும் இணைந்து ஆடியுள்ளனர். இதை அவருடைய ட்விட்டர் பக்கத்தில்,  “பார்ட்டி என்றால் எப்படி என்ஜாய் செய்ய வேண்டும் தெரியுமா? ஹீல்ஸை தூரப்போட்டு நடனம் ஆட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்