Skip to main content

வார இறுதியில் இலவசம்... நெட்பிளிக்ஸின் புது அசத்தலான திட்டம்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

ott

 

 

தற்போதைய டிஜிட்டல் உலகில் மிகவும் பிரபலமாக இருப்பது ஓடிடி. புதிய படங்கள் நேரடியாக திரையரங்களில் வெளியாகாமல் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் அளவிற்கு உலகம் முழுவதும் வளர்ந்துவிட்டது ஓடிடி. குறிப்பாக இந்த கரோனா லாக்டவுன் சமயத்தில் ஓடிடி நிறுவனங்கள் பல வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது.

 

உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருகும் ஓடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ். இந்தியாவில் தற்போது அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க, ஏதேனும் ஒரு வார இறுதியில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது சேவையை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவை இந்தியாவிலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதை அந்நிறுவனத்தின் சீஃப் புரோடக்ட் ஆஃபிசர் கிரெக் பீட்டர்ஸ் உறுதி செய்துள்ளார்.

 

“புதிய பார்வையாளர்களை கவரும் வகையில் ஒரு புதுமையான முயற்சியாக இதனை மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் எங்களிடம் உள்ள அற்புதமான கதைகள், எங்களது சேவை மற்றும் அதன் பயன்பாடு முதலியவற்றை அவர்கள் அறிந்து கொள்ள  உதவும். அதே சமயத்தில் புதிய வாடிக்கையாளர்களை எங்கள் தளத்தில் பணம் செழுத்தி பார்க்க வைக்கவும் உதவும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த இலவச சேவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்