Skip to main content

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு...

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் அஜித்தை வைத்து தமிழில் நேர்கொண்ட பார்வை என்றொரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ne


 

இந்த படத்தை தொடர்ந்து அஜித் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறது படக்குழு. போனி கபூர் பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக இதை தெரிவித்துள்ளார்.
 

சமீபத்தில் அஜித் குறித்து பரவிய வதந்திக்கு ட்விட்டரில் போனிகபூர் ஒரு பதிவை போட்டு முற்று புள்ளி வைத்துள்ளார். “நானும் அஜித்தும் தொடர்ந்து மூன்று படங்களில் பணிபுரிவது தொடர்பாக சில தவறான தகவல்கள் பரவுகின்றன. இதனை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நேர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜித்தும் நானும் சேர்ந்து ஒரு ஆக்‌ஷன் படத்தை எடுக்கிறோம். அதே நேரம் ஹிந்தியில் நடிக்க வைக்க நான் விரும்புகிறேன். ஆனால், அதுகுறித்து அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.”என்று பதிவிட்டுள்ளார்.
 

போனிகபூர் இன்று மாலை ஆறு மணிக்கு நெர்கொண்ட பார்வை படம் குறித்து ஒரு முக்கியமான அப்டேட்விடப்பட இருக்கிறது என்று புதிய போஸ்டருடன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நேர்கொண்ட பார்வை படம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்