Published on 18/11/2019 | Edited on 18/11/2019
அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை’ படத்தின் பூஜை சமீபத்தில் எளிமையாக நடந்தது. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் வெளிநாட்டில் போனிகபூரை சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அஜித்தின் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து நயன்தாராவுடன் போனிகபூர் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.