
தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமான 'மகாநதி' படத்தில் நடித்து வருகிறார். தமிழிலும் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். மற்றும் பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். சமீபத்தில் நடிகை சமந்தா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உலகமெங்கும் மே 9ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய, பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர்.