அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவெடுக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகவும் பல திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி ஜோ பைடன் முன்னிலை பெற்றிருக்கிறார். இன்னும் முக்கிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பல லட்சம் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. இதனால் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு சில மாகாணங்களில் ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருவதால் இது திருப்புமுனையாக இருக்குமா என்று எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் உலகின் தற்போதைய தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான மோர்கன் ஃப்ரீமேன் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார்.
அதில், “ஜோ பைடன் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், கண்டிப்பாக இது இவ்வளவு போட்டிகரமானதாக இருந்திருக்க கூடாது. அமெரிக்காவில் ஏதோ ஒன்று மிகவும் தவறாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.