Skip to main content

கமல்ஹாசனுக்கு மெட்ரோ இரயில் நிர்வாகம் நோட்டீஸ்  

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

metro administration notice kamalhaasan

 

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் ரூ. 60 கோடி மதிப்பில்  முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடம் கலங்கரை விளக்கத்தில் தொடங்கி ஆழ்வார்பேட்டை, நந்தனம், கோடம்பாக்கம், வடபழனி, போரூர் வழியாக மொத்தம் 30 நிலையங்கள் அமைய உள்ளன. இதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. 

 

அந்த வகையில் பாரதிதாசன் மெட்ரோ நிலைய வழித்தடத்திற்கான சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நுழைவாயில் அமைந்துள்ளது. இதனால் மெட்ரோ இரயில் நிர்வாகம் கமல்ஹாசனுக்கு சொந்தமான அந்த 10 அடி இடத்தை எடுத்துக் கொள்ள போவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அதில் இடத்திற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்