Published on 22/11/2019 | Edited on 22/11/2019
தம்பி, அலிபாபா, அகரம் உள்ளிட்ட தமிழ படங்களில் நடித்தவர் பிஜு மேனன். மலையாள சினிமாவில் பிரபல நடிகரான இவர், தென்னிந்திய சினிமாக்களில் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் 'அய்யப்பனும் கோஷியும்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அய்யப்பனாக பிஜூ மேனனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடிக்கின்றனர். கேரள மாநிலம் அடப்பாடி பகுதியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. படத்தில் ஒரு தீ விபத்து காட்சியை எடுத்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் நடிகர் பிஜூவுக்கு கை, கால்களில் பலத்த தீக் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மீட்ட படக்குழுவினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.