பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது.
![malavika](http://image.nakkheeran.in/cdn/farfuture/COshUH7eOJ0dnA9KSMUylZe6kT0MK3APnNQDEWJ-LTg/1573123378/sites/default/files/inline-images/Untitled-1_94.jpg)
![bxd](http://image.nakkheeran.in/cdn/farfuture/9kPiG_kxVm2Z1-I3-JMONrlxo79Lx3UtP7D6ABvC6Gw/1573123418/sites/default/files/inline-images/miga%20miga%20avasaram%20youtube%20bar%20ad_1.jpg)
தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் காற்று மாசுக்கு நடுவே நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகை மாளவிகா மோகனன் நேற்று டெல்லி சென்றார். அங்கே மாளவிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்நிலையில் மாளவிகா மோகனன் இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டன் புடவை கட்டிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். வைரலாகி வரும் படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பேராசிரியையாக நடிப்பதற்கு வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே இன்று மாளவிகா மோகனன் படப்பிடிப்பில் மேக்கப் போடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.