Skip to main content

"போன போவுற" பாடல் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம் படக்குழு 

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

mahaan movie pona povura song released date announced

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழு தற்போது வெளியிட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

சமீபத்தில் வெளியான "எவன்டா  எனக்கு கஸ்ட்டடி..." பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மகான் படத்தின் மூன்றாவது பாடலான "போன போவுற..." என்ற பாடல் நாளை (2.2.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்